செய்திகள் (Tamil News)

அதிகரிக்கும் மின்வெட்டு புகார் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Published On 2018-09-28 12:21 GMT   |   Update On 2018-09-28 12:21 GMT
தமிழகத்தில் காற்றாலை மின்சாரத்தை முழுமையாக கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரிய மனுகுறித்து தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. #TNGovt #ChennaiHC
சென்னை:

தமிழகத்தில் அதிக அளவில் மின்வெட்டுகள் நடந்துவருவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் குறைவாக இருப்பதாகவும், புறநகர் பகுதிகளில் அதிக அளவில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் காற்றாலை மின்சாரத்தை முழுமையாக கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரி தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுகுறித்து தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த பதில் மனுவில், தமிழகத்தில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், மற்ற மாநிலங்களை விட தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்துக்கு கூடுதல் நிலக்கரி வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதில் மனுவை மின்சாரத்துறை தலைவர் விக்ரம் கபூர் மற்றும் செயலாளர் முகமது நஜிபுதீன் ஆகியோர் நேரில் ஆஜராகி தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, தமிழகத்தில் சூரிய மின்சக்தி, மற்றும் காற்றாலை மின்சக்தியை ஏன் ஊக்குவிக்க கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். #TNGovt #ChennaiHC
Tags:    

Similar News