செய்திகள்

திருவள்ளூர் அருகே கல்லூரிக்கு சென்ற 2 மாணவிகள் மாயம்

Published On 2018-09-26 06:27 GMT   |   Update On 2018-09-26 06:27 GMT
திருவள்ளூர் அருகே கல்லூரிக்கு சென்ற 2 மாணவிகள் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ரங்கநாதன் நகரை சேர்ந்தவர் வேலன். இவரது மகள் சங்கீதா(27). இவர் திருப்பாச்சூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற மாணவி சங்கீதா மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி ஹனுமந்த புரத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் உமாமகேஸ்வரி (20) அரக்கோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி கல்லூரிக்கு சென்ற உமா மகேஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை.

இது குறித்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா மகேஸ்வரியை தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News