செய்திகள்

கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

Published On 2018-09-25 17:17 GMT   |   Update On 2018-09-25 17:17 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதனை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ் (ஊத்தங்கரை), சி.வி.ராஜேந்திரன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த புகைப்பட கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த அரசு திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் தொடர்பான புகைப்படங்கள், கிருஷ்ணகிரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் தொடர்பான புகைப்படங்கள், அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் என மொத்தம் 80-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், முன்னாள் பால்வள தலைவர் தென்னரசு, முன்னாள் நகராட்சி தலைவர் தங்கமுத்து, முன்னாள் நகராட்சி துணை தலைவர் வெங்கடாசலம், சூளகிரி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஹேம்நாத், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மனோஜ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News