செய்திகள்

ராமநாதபுரம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கிராமமக்கள் எதிர்ப்பு

Published On 2018-09-25 16:00 GMT   |   Update On 2018-09-25 16:00 GMT
ராமநாதபுரம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி செய்ய விடாமல் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்:

ரெயில்வே நிர்வாகம் ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை மூடிவிட்டு சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணியை 2016-ம் ஆண்டு தொடங்கியது.

மதுரை- ராமேசுவரம் ரெயில் வழித்தடத்தில் 30 இடங்களில் சுரங்கப்பாதை கட்ட முடிவு செய்து இதில் 28 இடங்களில் பணி நிறைவடைந்தது.

ராமநாதபுரம் அருகே கூரியூர், லாந்தை பகுதிகளில் மட்டும் ரெயில்வே சுரங்க பாதைப்பணிக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று லாந்தை கிராமத்தில் சுரங்கப்பாதை அமைக்க ஜே.சி.பி. மூலம் சாலையை தோண்டும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி செய்ய விடாமல் முற்றுகையிட்டனர். இதனால் பதட்டம் நிலவியது.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் கோரிக்கையை ஏற்க மறுத்த பொதுமக்கள் லாந்தை, கண்ணண்டை, பெரிய தாமரைகுடி.சின்ன தாமரைகுடி ஆகிய பகுதிகளில் சுமார் 900 ஏக்கர் நெல் விவசாயம் செய்து வருகிறோம்.

இங்கு சுரங்கப்பாதை அமைத்தால் அதன் வழியாக விவசாய எந்திரம் கொண்டு செல்ல இயலாது. ஆகையால் ரெயில்வே கேட் அமைத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் சுரங்கப்பாதையால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவித்தனர். எனினும் போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் தொடர்ந்து நடந்தன. #tamilnews

Tags:    

Similar News