செய்திகள்

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க கூடாது - காந்தி சிலை முன்பு காலவரையற்ற போராட்டம்

Published On 2018-09-19 11:49 GMT   |   Update On 2018-09-19 11:49 GMT
ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்ய கூடாது என வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
வடமதுரை:

திண்டுக்கல் அருகில் உள்ள வடமதுரை ஒன்றியம் பாகானத்தம் ஊராட்சி ஜங்கால்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மகாத்மா காந்தி சமூக நல அறக்கட்டளை நிர்வாகியாக உள்ளார்.

இவர் தமிழக குடியரசு தலைவர், முதல்வர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அதனை பயன்படுத்தி அவர்களை விடுவிக்கலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த படுகொலை சம்பவத்தில் ராஜீவ்காந்தி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உயர்காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியானார்கள். எனவே இக்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்தால் இந்தியாவின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலையும்.

எனவே அவர்களை விடுதலை செய்வதை தவிர்த்து நிரந்தர ஆயுள்தண்டனை வழங்க வலியுறுத்தி காந்தி பிறந்த நாளான வரும் அக்டோபர் 2-ந் தேதி காலை 5.55 மணி முதல் வடமதுரை காந்தி சிலை முன்பாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க போகிறேன். இதே உணர்வு கொண்ட பலரையும் போராட்டத்திற்கு அழைத்துள்ளேன். எனவே இந்த உண்ணாவிரதத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News