செய்திகள்

தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்

Published On 2018-09-19 11:13 GMT   |   Update On 2018-09-19 11:13 GMT
தேனி அருகே பள்ளி மாணவி மாயம் ஆனது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தேனி:

தேனி அருகே கண்டமனூர் எம். சுப்புலாபுரம் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் செல்வக்குமார் மகள் தயாநிதி (வயது16). ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த தயாநிதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கண்டமனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தயாநிதியை தேடி வருகின்றனர்.

கூடலூர் கருநாக்கன் முத்தன்பட்டி அரசமரத் தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி மனைவி முருகேஸ்வரி (24). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சம்பவத்தன்று முருகேஸ்வரி அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச்சென்றார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து முருகேஸ்வரியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News