செய்திகள்

இந்தியாவிலேயே புதுவையில் தான் தற்கொலை அதிகம்- தேசிய மனநிலை திட்ட அதிகாரி தகவல்

Published On 2018-09-11 10:35 GMT   |   Update On 2018-09-11 10:35 GMT
இந்தியாவிலேயே புதுவையில் தான் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய மனநிலை திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை அரசின் தேசிய மனநல திட்டத்தின் சார்பில் சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

இதனையொட்டி நலவழித்துறை அலுவலகத்திலிருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மருத்துவ மாணவர்கள் நடத்தினார்கள். பேரணியை மனநல திட்டத்தின் திட்ட அதிகாரி டாக்டர் ஜவகர் கென்னடி தொடங்கி வைத்தார் .

பின்னர் அவர் பேசும் போது, ”இந்தியாவிலேயே புதுவையில் தான் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மாதத்திற்கு 75 முதல் 100 பேர் வரை தற்கொலை செய்கின்றனர். மன அழுத்தமே தற்கொலைக்கு காரணியாக உள்ளது. தற்கொலைக்களை தடுக்கவே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்‘ என்றார்.

பேரணியில் பங்கேற்ற மருத்துவ மாணவர்கள் தற்கொலை எதிர்ப்பு பதாகை களை ஏந்தி சென்றனர். மேலும் தற்கொலைக்கு எதிரான கோ‌ஷங்களை அவர்கள் எழுப்பினர்.

நகரப்பகுதியில் தற்கொலைக்கு எதிர்ப்பான துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினர். #tamilnews
Tags:    

Similar News