செய்திகள்

வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

Published On 2018-09-11 09:03 GMT   |   Update On 2018-09-11 09:03 GMT
வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் 8 மி.மீ. மழையும், சோத்துப்பாறை அணையில் 6 மி.மீ. மழையும், மஞ்சளாறு அணை பகுதியில் 45 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.
கூடலூர்:

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் முல்லை பெரியாறு அணைக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால் அணை நீர்மட்டம் இந்த ஆண்டு 142 அடிவரை எட்டியது. எனவே கூடுதலாக தமிழக பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையும் நிரம்பியது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகம் இருந்ததால் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று 2,050 கனஅடி நீர் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று 3,490 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் இன்று 67.21 அடியாக உள்ளது.

பெரியாறு அணை நீர்மட்டம் 131.70 அடியாக உள்ளது. அணைக்கு 377 கனஅடிநீர் வருகிறது. அணையில் இருந்து 1,867 கன அடிநீர் திறந்து விடப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 115.29 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்தும் இல்லை. திறப்பும் இல்லை.

வைகை அணையில் 8 மி.மீ. மழையும், சோத்துப்பாறை அணையில் 6 மி.மீ. மழையும், மஞ்சளாறு அணை பகுதியில் 45 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News