செய்திகள்
வேலை நிறுத்தம் காரணமாக குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள்.

சின்னமுட்டம், குளச்சலில் மீனவர்கள் வேலை நிறுத்தம்

Published On 2018-09-10 11:50 GMT   |   Update On 2018-09-10 11:50 GMT
பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் கட்சிகள் இன்று நடத்திய முழு அடைப்பு போராட்டத்தில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்களும் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டத்தில் உள்ள மீன் பிடி துறைமுகத்தில் சுமார் 300-க்கும் அதிகமான விசைப்படகுகள் உள்ளன. தினமும் காலையில் கடலுக்குச் செல்லும் விசைப்படகுகள் இரவில் கரை திரும்பும்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் கன்னியாகுமரி, சின்னமுட்டம் விசைப்படகு மீனவர் சங்கத்தினர் பங்கேற்றனர். இதனால் இன்று காலை சின்ன முட்டத்தில் இருந்து எந்த விசைப்படகும் கடலுக்குச்செல்லவில்லை. இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இது போல குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்தும் இன்று எந்த விசைப்படகும் கடலுக்குச்செல்லவில்லை. இங்கிருந்து செல்லும் விசைப்படகுகள் பல நாட்கள் கடலில் தங்கி இருந்து மீன் பிடித்து திரும்புவார்கள்.

இன்று காலையில் கரை திரும்பிய விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்கள் எதுவும் படகுகளில் இருந்து இறக்கப்படவில்லை. இதனால் குளச்சல் மீன் மார்க்கெட் மற்றும் ஏலக்கூடம் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று காலையில் கடலுக்குச் செல்லும் விசைப்படகுகளும் போராட்டம் காரணமாக மீன் பிடிக்கச்செல்லவில்லை. அவை அனைத்தும் துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
Tags:    

Similar News