செய்திகள்

சென்னை அருகே பங்குச்சந்தை ஆலோசகர் கடத்தல் - போலீஸ் விசாரணை

Published On 2018-09-08 03:45 GMT   |   Update On 2018-09-08 07:26 GMT
சென்னை மதுரவாயலில் பங்குச்சந்தை ஆலோசகர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ConsultantKidnapped
போரூர்:

சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் வயது 35 பங்கு சந்தை நிறுவனத்தில் ஆலோசகராக உள்ளார்.

கணேஷ் நேற்று இரவு 11மணி அளவில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கால் டாக்ஸி மூலம் பூந்தமல்லியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் .

அப்போது மதுரவாயல் ஏரிக்கரை அருகே வந்த போது மற்றொரு காரில் வந்த 4 பேர் கும்பல் கணேஷ் சென்ற கார் மீது மோதி வழிமறித்து நிறுத்தினர் உடனடியாக அந்த கும்பல் காரிலிருந்த கணேஷை தங்கள் காரில் ஏற்றிக் கடத்தி சென்றனர்.

இதுகுறித்து கால் டாக்ஸி டிரைவர் ஆனந்த் மதுரவாயல் போலிசில் புகார் அளித்தார். கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜான்சுந்தர் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் ஆகியோர் மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் முதல் கட்ட விசாரணையில் கடத்தப்பட்ட கணேஷ் சென்னை வளசரவாக்கம் பகுதியில் அலுவலகம் நடத்தி வருவதும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து பெங்களூர் சென்றதும் அங்கு கணேஷ் மீது நடைபெற்று வரும் மோசடி வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு பின்னர் அங்கிருந்து கோயமுத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் கணேஷ் சென்னை திரும்பியதும் தெரியவந்துள்ளது.

முன்விரோதம் காரணமாக கணேஷ் கடத்தப்பட்டாரா அல்லது பணம் மோசடியில் ஈடுபட்டு அதன் காரணமாக கடத்தப்பட்டாரா என்கிற கோனத்தில் போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#ConsultantKidnapped
Tags:    

Similar News