செய்திகள்

பெரியகுளம் அருகே கர்ப்பிணிகளை அலைக்கழிக்கும் அரசு ஆஸ்பத்திரி நர்சுகள்

Published On 2018-09-07 09:51 GMT   |   Update On 2018-09-07 09:51 GMT
பெரியகுளம் அருகே அரசு ஆஸ்பத்திரி நர்சுகள் கர்ப்பிணிகளை அலைக்கழித்து வருகின்றனர்.

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களான வடுகபட்டி, ஜெயமங்கலம், சிந்துவம்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது பருவநிலை காரணமாக இப்பகுதி மக்கள் காய்ச்சல், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் இங்கு சென்றால் பெரியகுளம் ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள் என திருப்பி அனுப்புகின்றனர்.

மேலும் கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். கர்ப்பிணிகளுக்காக வழங்கப்படும் உபகரணங்கள் இங்கு வழங்கப்படுகின்றன. மேலும் சிகிச்சையும் சிறப்பாக இருப்பதால் அதிக அளவு கர்ப்பிணிகள் வருகின்றனர். ஆனால் இங்கு பணிபுரியும் செவிலியர்கள் கர்ப்பிணி பெண்களை அலைக்கழித்து வருகின்றனர்.

நீண்ட நாட்களாக இதே ஆஸ்பத்திரியில் இருப்பதால் டாக்டர் உத்தரவை செயல் படுத்தாமல் தனிச்சையாக செயல்படுகின்றனர். கர்ப்பிணி பெண்களை பதிவு செய்யாமல் அலைக்கழித்து வருகின்றனர். எனவே மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News