செய்திகள்

அய்யலூர் சந்தையில் முருங்கை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

Published On 2018-09-07 09:13 GMT   |   Update On 2018-09-07 09:13 GMT
அய்யலூர் சந்தையில் முருங்கை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், பஞ்சந்தாங்கி மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் செடிமுருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வறட்சியான காலகட்டங்களில் முருங்கை விவசாயம் இப்பகுதி மக்களுக்கு கைகொடுத்து வந்தது.

ஆனால் தேவை அதிகரிப்பு உள்ள இந்த காலகட்டத்தில் உரியவிலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பஞ்சந்தாங்கி மலையில் அய்யலூர் சந்தைக்கு கொண்டுவரப்படும் முருங்கை தரம்பிரிக்கப்பட்டு பல ஊர்களுக்கும், பரோடா போன்ற பகுதிக்கும் அனுப்பி வைக்கப்படும். உள்ளூர் வரத்து அதிகரிப்பு காரணமாக விலை கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

தற்போது ஒருகிலோ செடிமுருங்கை ரூ.7-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News