செய்திகள்

மாதவரத்தில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பு

Published On 2018-09-05 09:23 GMT   |   Update On 2018-09-05 09:23 GMT
மாதவரத்தில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலந்து வருவதால் பள்ளி மாணவ-மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

செங்குன்றம்:

மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட 32-வது வார்டில் உள்ள லட்சுமிபுரம், கடப்பா சாலை, அரசு மேல்நிலைப் பள்ளி சாலைகள் மற்றும் 25வது வார்டில் உள்ள கதிர்வேடு பாலாஜிநகர், மாதவரம் உடையார்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் செல்வதற்காக தெருவின் இருபுறங்களிலும் மழைநீர் கால்வாய் உள்ளது.

இந்த மழைநீர் கால்வாய்களில் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் வெளியாகும் கழிவுநீர்களை மழைநீர் கால்வாய்களில் விடப்பட்டு கழிவுநீர்வெளியே செல்லாமல் தேங்கி நிற்கிறது. லட்சுமிபுரம் அரசு மேனிலைப்பள்ளி அருகே மழைநீர் கால்வாய் கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசப்பட்டு பள்ளி மாணவ-மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

கால்வாய்களில் கழிவு நீர் தேங்கியுள்ளதால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மழைநீர் கால்வாய்களில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News