செய்திகள்

நெல்லையில் நடைபெறும் தாமிரபரணி புஷ்கரத்தை அரசு விழாவாக நடத்த பரிசீலனை - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2018-09-01 08:28 GMT   |   Update On 2018-09-01 08:28 GMT
நெல்லையில் அடுத்த மாதம் நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழா நிகழ்ச்சியை அரசு விழாவாக நடத்த பரிசீலனை செய்யப்படும் என்று துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPanneerselvam #ADMK

சிவகிரி:

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 303-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகிரி அருகே உள்ள நெற்கட்டும் செவலில் உள்ள மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெற்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவன் மணி மண்டபத்தை பராமரிக்க ஏற்கனவே தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் விழா சிறப்பாக நடத்த அரசு முழு ஆதரவு வழங்கும்.

அடுத்த மாதம் நெல்லையில் நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழா நிகழ்ச்சியை அரசு விழாவாக நடத்த பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News