செய்திகள்

சின்னமனூரில் பொதுமக்களுக்கு பயன்படாத பஸ் நிலையம்

Published On 2018-08-27 09:47 GMT   |   Update On 2018-08-27 09:47 GMT
சின்னமனூர் பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சின்னமனூர்:

சின்னமனூர் நேருஜி பஸ் நிலையம் கட்டுமானப்பணிகள் முடிவடைந்தும் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. பழைய பஸ்நிலையம் இருக்கும் போதே இது செயல்படாத நிலையில்தான் இருந்தது. இதனையடுத்து புதிய பஸ்நிலையம் திறக்கப்பட்டாலும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை

சின்னமனூரில் மட்டும் 4 பஸ் நிறுத்தங்கள் உள்ளது. இங்கு பஸ்கள் நிறுத்தப்படாததால் பொதுமக்கள் அனைவரும் பஸ்நிலையம் வந்துதான் பஸ் ஏறி செல்கின்றனர். பஸ் நிலையத்துக்கு வரும் சாலைகள் முழுவதும் ஆக்கிரமிப்புகள் உள்ளது.

மக்கள் வரிப்பணத்தில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வராமல் அதிகாரிகள் மெத்தனத்தால் நிதி வீணடிக்கப் பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே நகராட்சியும், காவல் துறையும், நகர் நலக்குழுவும் இணைந்து பஸ்நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News