செய்திகள்

உடன்குடி- திருச்செந்தூர் பகுதியில் நிறுத்தப்பட்ட மினிபஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா? 50 கிராமத்தின் எதிர்பார்ப்பு

Published On 2018-08-25 11:19 GMT   |   Update On 2018-08-25 11:19 GMT
உடன்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதியில் நிறுத்தப்பட்ட மினிபஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா? என 50 கிராமத்தின் எதிர்பார்த்து வருகின்றனர்.

உடன்குடி:

தமிழகத்தில் பஸ்வசதி இல்லாத கிராமங்களே இருக்க கூடாது என்பதற்காகதான் மினிபஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. உடன்குடியில் இருந்து கிராமங்கள் வழியாக திருச்செந்தூருக்கு 3 மனிபஸ்களும், மெஞ்ஞானபுரத்திற்கு 2, சீருடையார்புரத்திற்கு ஒன்று, படுக்கப்பத்துக்கு ஒன்று உள்ளிட்ட 8 தனியார் பஸ்களும் சுமார் 50 கிராமங்கள் வழியாக சென்றது.

3 வருடங்களுக்கு முன்பு 8 மினிபஸ்களும் திடீரென்று நிறுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.பாதிக்கப்பட்ட கிராம மக்கள் இந்த மினி பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று பல்வேறு வகையில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சட்டமன்றத்திலும் பேசினார்.

எனவே மீண்டும் மினி பஸ்கள் இயக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 8 தனியார் மினி பஸ்களையும் அரசு போக்குவரத்து கழகம் நிரந்தரமாக தடைசெய்து விட்டு இதே வழிதடத்தில்அரசு பஸ்களை இயக்கி கிராமங்களில் பஸ்வசதி இல்லாத நிலையை போக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News