செய்திகள்

போலீசாருக்கு மன அழுத்த பயிற்சி - 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி. ஆலோசனை

Published On 2018-08-23 11:12 GMT   |   Update On 2018-08-23 11:12 GMT
போலீசாருக்கு மன அழுத்த பயிற்சி அளிப்பது தொடர்பாக 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி. இன்று ஆலோசனை நடத்தினார்.
கோவை:

தமிழக கூடுதல் டி.ஜி.பி. (காவல்துறை நலம்) தாமரைக் கண்ணன் இன்று கோவை வந்தார். அவர் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் 4 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி, கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, டி.ஜி.பி. கார்த்திகேயன், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன், மற்றும் திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைப்பது தொடர்பாக ஒவ்வொரு மாநகர், மாவட்டத்தில் இருந்து 15 போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த 15 பேர் பெங்களூரில் பயிற்சி பெற்று வந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள போலீசாருக்கு மன அழுத்த பயிற்சி அளிக்க உள்ளனர். இது தொடர்பாக கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Tags:    

Similar News