செய்திகள்

காவிரி ஆற்று வெள்ளநீர் புகுந்ததால் மலைகளில் ஏறி தஞ்சம் புகுந்த மக்கள்

Published On 2018-08-20 07:12 GMT   |   Update On 2018-08-20 07:12 GMT
ஒகேனக்கல்லில் காவிரி ஆற்று வெள்ளநீர் வீட்டிற்குள் புகுந்து இருப்பதால் கிராம மக்கள் மலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஒகேனக்கல்:

ஒகேனக்கல்லை அடுத்த கோத்திக்கல் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ. தொலைவில் புளியமரத்துக் கொம்பு கொண்டலாம் கொட்டாய் என்ற கிராமம் உள்ளது. இங்கு மீன்பிடி மற்றும் மரம் வெட்டும் தொழிலாளர்கள் குடும்பத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இங்குள்ள குடிசைகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடிசைகளின் மண்சுவர்கள் இடிந்து விழுந்தன. மேலும் 40 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதைத்தொடர்ந்து இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறி அருகில் உள்ள மலை மீது ஏறி தங்கி உள்ளனர்.
Tags:    

Similar News