செய்திகள்

கேரளாவுக்கு பைபர் படகு - உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

Published On 2018-08-19 22:36 GMT   |   Update On 2018-08-19 22:36 GMT
மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தலின் பேரில், நாகப்பட்டினம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகப்பட்டினத்தில் இருந்து எந்திரத்துடன் கூடிய பைபர் படகு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. #KeralaFlood #UdayanidhiStalin
சென்னை:

கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசும், பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு, உடைமைகளை கேரள மக்களுக்கு வழங்கிய வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில், கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் வகையில் பைபர் படகை அனுப்பி வைக்குமாறு அங்குள்ள கலைத்துறை அமைப்பை சேர்ந்தவர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தலின் பேரில், நாகப்பட்டினம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகப்பட்டினத்தில் இருந்து எந்திரத்துடன் கூடிய பைபர் படகு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த படகில் உதயநிதி ஸ்டாலின் பெயரும், உதய சூரியன் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது.  
Tags:    

Similar News