செய்திகள்

ராமநாதபுரம் அருகே மணல் குவாரியை முற்றுகையிட்டு 14 கிராம மக்கள் போராட்டம்

Published On 2018-08-13 11:30 GMT   |   Update On 2018-08-13 11:30 GMT
ராமநாதபுரம் அருகே மணல் குவாரியை 14 கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகேயுள்ள சித்தார்கோட்டை ஊராட்சி பழனி வலசை கிராமத்தில் அரசின் விதிமுறைகளை மீறி தனியார் மணல் தோண்டி வந்தனர். இதனால் நீராதாரம் பாதிக்கப்பட்டது.

எனவே பொதுமக்கள் கலெக்டர் நடராஜனை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில், அனுமதியின்றி செயல்படும் மணல் குவாரியை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இருப்பினும் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்து ஐக்கிய மகா சபையின் சார்பில் 14 கிராம மக்கள் இன்று மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் விரைந்து வந்தார். முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்கள் வருவாய்த்துறையினர் இங்கு வந்து மணல் குவாரி செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்தால் தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடந்தது.

Tags:    

Similar News