செய்திகள்

புதுவை சட்டசபை எதிரில் வாகனங்கள் நிறுத்த தடை

Published On 2018-08-11 09:27 GMT   |   Update On 2018-08-11 09:27 GMT
புதுவை சட்டசபை நுழைவு வாயில் பகுதியில் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையின் நுழைவு வாயில் அருகே இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், சமீபகாலமாக வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக 3 வரிசையில் சாலைகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

மேலும் சட்டசபை எதிரில் பாரதி பூங்கா செல்லும் சாலையிலும் வாகனங்களை குறுக்கும், நெடுகிலும் நிறுத்துகின்றனர். இதனால் சட்டசபைக்கு வரும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளின் வாகனங்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தது.

இதனால் சட்டசபை நுழைவு வாயில் பகுதியில் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

அப்பகுதியில் ‘நோ பார்க்கிங்’ என்ற தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டசபை எதிரில் உள்ள சாலை, மக்கள் சென்றுவர விசாலமாக உள்ளது. இருப்பினும் இந்த தடை உத்தரவு எத்தனை நாள் நீடிக்கும்? என்பது கேள்விக் குறிதான்.

Tags:    

Similar News