search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள் நிறுத்த தடை"

    புதுவை சட்டசபை முன்பு வாகனங்கள் நிறுத்த நிரந்தர தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்றத்தில் அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் அலுவலகம் உள்ளது.அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்களை சந்திக்க நாள்தோறும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் சட்டமன்றத்துக்கு வருகை தருவார்கள். அவர்கள் சட்டமன்ற நுழைவு வாயில் ஒட்டியுள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வார்கள். பல ஆண்டுகளாக இந்த முறையே நடைமுறையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சுதந்திரதினவிழா பாதுகாப்புக்காக சட்டமன்றம் முன்பு வாகனங்களை நிறுத்த போலீசார் தற்காலிகமாக தடை விதித்தனர்.

    தற்காலிகமாக அமைக்கப்பட்ட வாகனத்தை தற்போது போலீசார் நிரந்தரமாக்கி உள்ளனர். மேலும், சட்டமன்றத்தின் இருபுறங்களிலும் போலீசார் பேரிக்கார்டு அமைத்து வாகனங்களை நிறுத்த தடை விதித்தார்கள்.

    அதோடு அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். திடீர் தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    இருசக்கர வாகனங்களை தலைமை தபால் நிலையம் அருகிலும், அரசு மருத்துவமனைக்கு அருகிலும் பொதுமக்கள் நிறுத்தினார்கள்.

    வழக்கமாக நகரத்தின் மக்கள் அதிக அளவில் கூடும் பிரதான சாலைகளில் கூட ஒருபுறம் வாகன பார்க்கிங் முறை அமலில் உள்ளது. அதேபோல் சட்டமன்றத்தின் முன்பு ஓருபுற பார்க்கிங்கை அமல்படுத்தி முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    புதுவை சட்டசபை நுழைவு வாயில் பகுதியில் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் நுழைவு வாயில் அருகே இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆனால், சமீபகாலமாக வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக 3 வரிசையில் சாலைகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

    மேலும் சட்டசபை எதிரில் பாரதி பூங்கா செல்லும் சாலையிலும் வாகனங்களை குறுக்கும், நெடுகிலும் நிறுத்துகின்றனர். இதனால் சட்டசபைக்கு வரும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளின் வாகனங்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தது.

    இதனால் சட்டசபை நுழைவு வாயில் பகுதியில் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

    அப்பகுதியில் ‘நோ பார்க்கிங்’ என்ற தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டசபை எதிரில் உள்ள சாலை, மக்கள் சென்றுவர விசாலமாக உள்ளது. இருப்பினும் இந்த தடை உத்தரவு எத்தனை நாள் நீடிக்கும்? என்பது கேள்விக் குறிதான்.

    ×