செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருட்டு

Published On 2018-08-10 07:36 GMT   |   Update On 2018-08-10 07:38 GMT
அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி கட்டிகானப் பள்ளி புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் வசித்து வருபவர் கணபதி(50). இவர் எம்.சி.பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி, குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் சமீபத்தில் கலெக்டர் அலுவலகம் எதிரே புதியதாக வீடு கட்டி அங்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் ஆடி மாதம் என்பதால் இன்னும் பழைவீட்டிலிருந்து பொருட்களை மாற்றாமல் அன்றாட தேவைக்கு குறைந்த அளவிலான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு சென்றுள்ளனர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்று, மாலை வீடு திரும்பினர்.

அப்போது வீட்டு வசதி வாரிய வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோ திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் பீரோவில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து ஆசிரியர் கணபதி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டிஎஸ்பி கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வீட்டை பார்வையிட்டனர். அத்துடன் கைரேகை நிபுணரையும் வரவழைத்து, அங்கு பதிவாகியிருந்த கைரேகையை பதிவு செய்தனர். அத்துடன் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே செட்டிக் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி பழனியம்மாள். கடந்த 27-ந் தேதி பழனியம்மாள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.

பின்னர் அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவின் பூட்டை உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 2 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பாரூர் போலீஸ இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News