செய்திகள்

நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி ஏற்படுத்த 4 மாதம் அவகாசம் வழங்கியது ஐகோர்ட்

Published On 2018-08-04 07:57 GMT   |   Update On 2018-08-04 07:57 GMT
நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதியை ஏற்படுத்த 4 மாதம் அவகாசம் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டது. #CourtVideoConferencing #MadrasHighCourt
சென்னை:

கடலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரத்து வழக்கின் விசாரணையை காணொலி காட்சி மூலம் நடத்த கோரி, லண்டனில் பணியாற்றி வரும் சென்னையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள்துறை மற்றும் நிதித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



அதில், தமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதியை ஏற்படுத்த 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொலி காட்சி வசதி ஏற்படுத்துவது தொடர்பாக தலைமை பதிவாளர் விளக்கம் அளித்தார். இந்த வசதியை ஏற்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி ஏற்படுத்த 4 மாத காலம் அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். #CourtVideoConferencing #MadrasHighCourt
Tags:    

Similar News