செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தகில்ரமணி நியமனம்

Published On 2018-08-04 03:47 GMT   |   Update On 2018-08-04 03:47 GMT
மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான வி.கே.தகில்ரமணியை சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது. #ChennaiHighCourt #JusticeTahilramani
சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய இந்திரா பானர்ஜியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது. இதனை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டதையடுத்து விரைவில் நீதிபதி இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.

இந்திரா பானர்ஜியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க பரிந்துரை செய்த அதேசமயம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு நீதிபதி வி.கே.தகில்ரமணியை நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துள்ளது.



சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தேர்ச்சி பெற்ற நீதிபதி வி.கே.தகில்ரமணி, மும்பை கீழ் நீதிமன்றங்களில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டார். 1982 ஆம் ஆண்டு மும்பை மற்றும் கோவாவில் கீழ் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 2001-ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். #ChennaiHighCourt #JusticeTahilramani
Tags:    

Similar News