செய்திகள்

வந்தவாசி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

Published On 2018-08-03 10:03 GMT   |   Update On 2018-08-03 10:03 GMT
வந்தவாசி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த கொடநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது49) கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று மாலை சென்னவரம் என்ற பகுதியில் வேலைக்கு சென்று விட்டு மேல்மருவத்தூர் சாலையில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது கோட்டை மூலை என்ற இடத்தில் அந்த வழியாக பால் ஏற்றி வந்த லாரி சைக்கிள் மீது மோதியது.

இதில் சேகர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News