செய்திகள்

14 வருடங்களாக ரூ.6 ஆயிரம் சம்பளம்- ஊதிய உயர்வு கேட்டு துப்புரவு பணியாளர்கள் மனு

Published On 2018-07-30 09:42 GMT   |   Update On 2018-07-30 09:42 GMT
தஞ்சையில் 14 வருடங்களாக துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது எனவும் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:

தஞ்சை வடக்கு வாசல் ரோகிணி காலனியில் வசிக்கும் துப்புரவு பணியாளர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாத ஊதியமாக ரூ.6 ஆயிரம் தான் வழங்கபடுகிறது.

இதை வைத்து எங்களது குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. மற்றும் வீட்டு வாடகை, குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். நாங்கள் வாங்கும் ஊதியத்துக்கு மேலாக அதிகமாக வேலை பார்த்து வருகிறோம்.

எங்களது நலனை கருத்தில் கொண்டு கூடுதல் சம்பளம் வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. #tamilnews
Tags:    

Similar News