செய்திகள்

பெரியநாயக்கன்பாளையம் அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு

Published On 2018-07-24 10:46 GMT   |   Update On 2018-07-24 10:46 GMT
பெரியநாயக்கன்பாளையம் அருகே இன்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் 4 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கவுண்டம்பாளையம்:

கோவை பெரியநாயக்கன் பாளையம் பிளிச்சி அருகே உள்ள பெட்டதாபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். கட்டிட கான்டிராக்டர். இவரது மனைவி பானுபிரியா (வயது 33). இன்று அதிகாலை பானுபிரியா தனது வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து முகமூடி அணிந்த 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் பானுபிரியாவின் வாயை கையால் அமுக்கி சத்தம் போட முடியாதபடி கத்தியைகாட்டி மிரட்டி அவர் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

இதில் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் முகமூடி திருடர்கள் இருட்டுக்குள் மறைந்து விட்டனர்.

வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து இளம்பெண்ணிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பானுபிரியா பெரிய நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற முகமூடி திருடர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News