search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியநாயக்கன்பாளையம்"

    • பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சீசா விளையாடிய குழந்தைகளிடம் பேசினார்
    • காவலர் குடியிருப்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்க ன்பாளையம் போலீஸ் குடியிருப்பில் சுமார் 50 சென்ட் பரப்பளவில் சிறுவர் பூங்கா அமைக்க ப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராய ணன் காவலர் குடியிருப்புக்கு வந்தார்.

    அப்போது அவரை குழந்தைகள் பூங்கொந்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்வெட்டு திறந்துவைத்து ரிப்பன் வெட்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சீசா விளையாடிய குழந்தைக ளிடம் பேசினார். அங்கு உள்ள செட்டில்கார்ட் மைதானத்தில் பயிற்சி எடுத்துவரும் உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்களிடம் கைகு லுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

    தொடர்ந்து காவலர் குடியிருப்பை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு, அங்கு வசிக்கும் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் காவலர் குடியி ருப்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்றவர், அங்கு உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் பெரியநாய க்கன்பாளையம் போலீஸ் டி.எஸ்.பி நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தாமோதரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், கணேசமூர்த்தி, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பசாமி, தனிப்பிரிவு சிறப்பு காவலர் கங்காதரன் விஜயகுமார், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பாலகணேஷ், காவலர் அன்சர், மாருதி கல்லூரி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் காவலர்களின் குடும்பத்தி னர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலத்தின் கட்டுமானப் பணி 60 சதவீதம் முடிவடைந்துள்ளது.
    • கட்டுமான பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,

    கோவை

    கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதிகள் முக்கியமானதாகும்.

    இந்த சாலைகளின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்புப் பகுதிகளில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, பெரியநாயக்கன் பாளையத்தில் ரூ.115.24 கோடி மதிப்பில் 1,882 மீட்டர் தூரம் நீளம், 17.60 மீட்டர் அகலத்தில் 48 தூண்களைக் கொண்டு 4 வழித்தட போக்குவரத்து கொண்ட மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் ரூ.41.88 கோடி மதிப்பில் 658 மீட்டர் தூரம் நீளம், 17.20 மீட்டர் அகலத்தில், 14 தூண்களைக் கொண்டு 4 வழித்தட போக்குவரத்து கொண்ட மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதில் பெரியநாயக்கன் பாளையம் சந்திப்பில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந் தேதியும், ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந் தேதியும் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது 2 இடங்களிலும் மேம்பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,

    பெரியநாயக்கன் பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணியை விரைவாக முடிக்க வேண்டும். மேம்பாலம் பணிக்காக வண்ணான்கோவில் அருகே மாற்றுப்பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பெ ரியநாயக்கன்பாளையம், ஜி.என்.மில்ஸ் பாலத்தின் கட்டுமானப் பணிகளையும் விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பெரிய நாயக்க ன்பாளையம் சந்திப்பு மேம்பாலம் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி எல்.எம்.டபிள்யூ சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு ஆகியவற்றை கடந்து வண்ணான்கோவில் சந்திப்பில் முடிகிறது.

    இந்த பாலத்தால் 3 சந்திப்புகளிலும் போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த பாலத்தின் கட்டுமானப் பணி 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கை யில் தூண்கள் அமைக்க ப்பட்டுள்ளன. அவற்றின் மீது தளம் அமைப்பதற்காக, 48 எண்ணிக்கையிலான தளங்கள் அமைக்க வேண்டியுள்ளது. இதில் 15 தளங்கள் அமைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 33 தளங்கள் அமைக்கும் பணி மேற் கொள்ளப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இம்மேம்பாலத்தின் கட்டுமானப் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், ஜி.என்.மில்ஸ் சந்திப்பு மேம்பாலம் அங்குள்ள ஜான் பாஸ்கோ சர்ச் அருகே தொடங்கி ஜி.என்.மில்ஸ் சந்திப்பை கடந்து வெள்ளக்கிணறு பிரிவில் முடிவடைகிறது.

    இந்த பாலத்தின் கட்டுமானப் பணியில் தற்போது 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. தூண்கள், மேல் தளங்கள் அமைக்கப்பட்டு விட்டன. அருகே சர்வீஸ் சாலைகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நிலுவையில் உள்ளன. நடப்பாண்டு டிசம்பர் மாதத்துக்குள் இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    • 500 மீட்டர் தூரம் வரை அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் வசிப்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
    • சாலையின் நடுவே சுரங்க குழாய்கள் மூலம் சாக்கடை வடிகால்கள் செல்கின்றன.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பா ளையத்தில் ரூ.115.24 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ராமகிருஷ்ண மிஷன் முதல் வண்ணான்கோவில் வரை சுமார் 1.4 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து வண்ணான்கோவில் வரை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, தூண்களுக்கு இடையே கான்கீரிட் அமைக்கும் பணி நடை–பெற்று வருகிறது.

    பெரியநாயக்கன்பா ளையம் மேம்பால பணிக்காக மேட்டுப்பா–ளையத்தில் இருந்து கோவை வரும் வாகனங்கள் வண்ணாண்கோவில் அருகே உள்ள மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் வண்ணான் கோவில் பகுதியில் இறங்குதளம் அமைக்க தேவைப்படும் பகுதியில் இருபுறமும் சாலையின் நடுவே சுரங்க குழாய்கள் மூலம் சாக்கடை வடிகால்கள் செல்கின்றன. இந்த சாக்கடை வடிகால்களுக்கு பாதிப்பு இல்லாமல் புதிதாக கான்கீரிட் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதற்காக திட்டமிடப்ப டாமல் வண்ணான் கோவில் அருகே 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஜோதிபுரம் பகுதியில் கோவை-மேட்டுப்பா–ளையம் 4 வழிச்சாலையில் ஜோதிபுரத்தில் இருந்து வண்ணான் கோவில் செல்லும் சாலை மட்டும் முழுவதுமாக பேரிகார்டுகள் கொண்டு அடைக்கப்பட்டு வேறு வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

    ஏற்கனவே வண்ணான்கோவில் வழியாக செல்லும் மாற்றுப்பாதைக்கு மாற்றாக இன்னொரு மாற்றுப்பாதை அதன் அருகிலேயே உள்ளது. அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்லமுடியாது. ஆனால் இருசக்கர வாகனங்கள் செல்லலாம். அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லலாம். இந்நிலையில் இருசக்கர வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தாமல் முழு வதுமாக அடைக்க ப்பட்டுள்ளதால் அப்பகுதி யில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் வாகனங்கள் வேறு வழியில் செல்ல திடீரென ஜோதிபுரம் நால்ரோடு ஜங்கசனின் ஒருபுறம் மட்டும் முழுவதுமாக பேரிக்கார்டுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

    இதனால் சுமார் 500 மீட்டர் தூரம் வரை அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் வசிப்பவர்கள், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்பவர்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.இருசக்கர வாகனங்கள் சென்று வர வழி இருந்தும் அதனை கண்டுகொ ள்ளாலாமல் அவசர கதியில் திட்டமிடப்படாமல் ஜோதிபுரம் பகுதியில் வழி அடைக்கப்பட்டுள்ளது. உடனடியாக இருசக்கர வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு வழி ஏற்படுத்தி பேரிகார்டுகளை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    2 வாலிபர்கள் தங்களின் செல்போனில் உள்ள ஒரு போட்டோவை காண்பித்து பெண்ணிடம் இவரை தெரியுமா? என்று கேட்டனர்.

    கோவை:

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள சாம நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி பிரேமா (வயது 42). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு அருகே வசித்து வரும் பெண் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பிரேமாவின் அருகில் வந்த தங்களின் செல்போனில் உள்ள ஒரு போட்டோவை காண்பித்து இவரை தெரியுமா? என்று கேட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் கண்இமைக்கும் நேரத்தில் பிரேமா கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை பறித்தார். பின்னர் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார்.

    இதில் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பெண்ணிடம் நூதன முறையில் 6 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

    ×