search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyanaickenpalayam"

    • பெரியநாயக்க ன்பாளையம் பகுதியில் கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
    • நடைபாதை அமைக்கப்பட்டு பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்க ன்பாளையம் பகுதியில் கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையின் இரு புறமும் சாலை விரிவாக்கம் சர்வீஸ் ரோடு அமைக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலை திட்டமிட்டுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரிய நாயக்க ன்பாளையம் சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் உள்ள 15 செண்ட் பூமியை எடுக்க நெடுஞ்சாலை துறை அளவீடு செய்துள்ளது. பள்ளி வாசலை 800 குடும்பங்கள் தொழுகைக்காகவும் அடக்கம் செய்யவும் பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூடலூர் நகராட்சி பகுதியில் இடஒதுக்கீடு செய்து தருமாறு கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதன் பேரில் சிறப்பு நகரசபை கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. நகரசபை தலைவர் அறிவரசு தலைமையில் நடந்த கூட்டத்தில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தெற்குப்பாளையம் பிரிவிற்கு தெற்கே மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்துக்கள் மயானத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இடத்தை ஒதுக்கீடு செய்து முஸ்லீம் மக்கள் அடக்கத்திற்கு பயன்படுத்தி கொள்ள அனுமதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் நகராட்சி துணைத்தலைவர் ரதிராஜேந்திரன் உட்பட கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான ஆணை யை சுன்னத் ஜமாத் செயலர் அப்துல் ரகுமான், பொருளாளர் இப்ராஹீம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    இது குறித்து தலைவர் அறிவரசு கூறுகையில் அப்பகுதியில் சுகாதாரம் மேம்படுத்தப்படும் நடைபாதை அமைக்கப்பட்டு பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்துக்கள், முஸ்லீம்களுக்கு அருகருகே மயானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். 

    • பாலத்தின் கட்டுமானப் பணி 60 சதவீதம் முடிவடைந்துள்ளது.
    • கட்டுமான பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,

    கோவை

    கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதிகள் முக்கியமானதாகும்.

    இந்த சாலைகளின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்புப் பகுதிகளில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, பெரியநாயக்கன் பாளையத்தில் ரூ.115.24 கோடி மதிப்பில் 1,882 மீட்டர் தூரம் நீளம், 17.60 மீட்டர் அகலத்தில் 48 தூண்களைக் கொண்டு 4 வழித்தட போக்குவரத்து கொண்ட மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் ரூ.41.88 கோடி மதிப்பில் 658 மீட்டர் தூரம் நீளம், 17.20 மீட்டர் அகலத்தில், 14 தூண்களைக் கொண்டு 4 வழித்தட போக்குவரத்து கொண்ட மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதில் பெரியநாயக்கன் பாளையம் சந்திப்பில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந் தேதியும், ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந் தேதியும் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது 2 இடங்களிலும் மேம்பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,

    பெரியநாயக்கன் பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணியை விரைவாக முடிக்க வேண்டும். மேம்பாலம் பணிக்காக வண்ணான்கோவில் அருகே மாற்றுப்பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பெ ரியநாயக்கன்பாளையம், ஜி.என்.மில்ஸ் பாலத்தின் கட்டுமானப் பணிகளையும் விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பெரிய நாயக்க ன்பாளையம் சந்திப்பு மேம்பாலம் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி எல்.எம்.டபிள்யூ சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு ஆகியவற்றை கடந்து வண்ணான்கோவில் சந்திப்பில் முடிகிறது.

    இந்த பாலத்தால் 3 சந்திப்புகளிலும் போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த பாலத்தின் கட்டுமானப் பணி 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கை யில் தூண்கள் அமைக்க ப்பட்டுள்ளன. அவற்றின் மீது தளம் அமைப்பதற்காக, 48 எண்ணிக்கையிலான தளங்கள் அமைக்க வேண்டியுள்ளது. இதில் 15 தளங்கள் அமைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 33 தளங்கள் அமைக்கும் பணி மேற் கொள்ளப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இம்மேம்பாலத்தின் கட்டுமானப் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், ஜி.என்.மில்ஸ் சந்திப்பு மேம்பாலம் அங்குள்ள ஜான் பாஸ்கோ சர்ச் அருகே தொடங்கி ஜி.என்.மில்ஸ் சந்திப்பை கடந்து வெள்ளக்கிணறு பிரிவில் முடிவடைகிறது.

    இந்த பாலத்தின் கட்டுமானப் பணியில் தற்போது 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. தூண்கள், மேல் தளங்கள் அமைக்கப்பட்டு விட்டன. அருகே சர்வீஸ் சாலைகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நிலுவையில் உள்ளன. நடப்பாண்டு டிசம்பர் மாதத்துக்குள் இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    2 வாலிபர்கள் தங்களின் செல்போனில் உள்ள ஒரு போட்டோவை காண்பித்து பெண்ணிடம் இவரை தெரியுமா? என்று கேட்டனர்.

    கோவை:

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள சாம நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி பிரேமா (வயது 42). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு அருகே வசித்து வரும் பெண் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பிரேமாவின் அருகில் வந்த தங்களின் செல்போனில் உள்ள ஒரு போட்டோவை காண்பித்து இவரை தெரியுமா? என்று கேட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் கண்இமைக்கும் நேரத்தில் பிரேமா கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை பறித்தார். பின்னர் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார்.

    இதில் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பெண்ணிடம் நூதன முறையில் 6 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

    பெரியநாயக்கன்பாளையத்தில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் கென்னடி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவசங்கர் (வயது 30). பெயிண்டர். இவர் பூர்ணிமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். 11 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த சில நாட்களாகவே சரியாக வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்தார். இதனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சிவசங்கர் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்தார்.

    சிறிது நேரத்தில் வயிற்று வலி தாங்க முடியாமல் சிவங்கர் அலறி சத்தம் போட்டார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிவசங்கரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவசங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரியநாயக்கன்பாளையம் அருகே குடிபோதையில் ரகளை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள திருமலைநாயக்கன் பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.

    இந்த கடைக்கு ஜோதிபுரம் வீரபாண்டி பிரிவு லட்சுமி கோவில் வீதியை சேர்ந்த அருண் (வயது 21) என்பவர் மது குடிக்க சென்றுள்ளார். இவர் மினிடோர் டிரைவராக உள்ளார்.

    போதை அதிகமானதால் டாஸ்மாக் கடையில் மற்றவர்களுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஆட்டோவில் ஏற்றி பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பினர். ஆனால் இடையில் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். அதற்குள் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    ஆனால் ஸ்டேசனுக்கு வரமாட்டேன், நான் என்ன கொலை செய்து விட்டேனா, என்று அவர் ரகளையில் ஈடுபட்டதால் கையை கட்டி மீண்டும் ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அருண் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×