செய்திகள்

ராஜபாளையத்தில் பலத்த சூறாவளி - தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தன

Published On 2018-07-18 10:36 GMT   |   Update On 2018-07-18 10:36 GMT
ராஜபாளையத்தில் நள்ளிரவில் பலத்த காற்று வீசிய போது 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தது.
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ராக்காச்சியம்மன் கோவில் பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. இத்தோப்பில் மா, பலா, விளாமரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இப் பகுதியில் திடீரென்று நள்ளிரவில் பலத்த காற்று வீசியது. இதில் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னந்தோப்புகளில் உள்ள தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தது. ஒரு தோப்பில் மட்டும் 200க்கும் மேற்பட்ட தென்னை, மா, பலா, விளா மரங்கள் சாய்ந்து சேதமடைந்தது. இம் மரங்கள் சுமார் 30 வருடங்கள் வளர்ந்து பலன் தரக் கூடிய மரங்களாக இருந்தது. மரங்கள்வேருடன் சாய்ந்தது விவசாயிகளுக்கு கண்ணீரை வரவழைத்தது.

இதுகுறித்து விருது நகர் மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் மற்றும் வனத்துறை, வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காற்று காரணமாக ஏராளமான இளநீர் சாய்ந்து குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதை விவசாயிகள் நகர் பகுதியில் டிராக்டர்களில் வைத்து ரூ.5 முதல் ரூ.10 வரை மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

சாய்ந்த தென்னை மரங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40,000 வரை நிவாரணம் வழங்குமாறு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News