செய்திகள்

தாரமங்கலத்தில் பிளஸ்-2 மாணவி பஸ் சக்கரத்தில் சிக்கி பலி - டிரைவர் கைது

Published On 2018-07-17 16:06 GMT   |   Update On 2018-07-17 16:06 GMT
தாரமங்கலத்தில், பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி பஸ்சில் இருந்து இறங்கியபோது, தவறி விழுந்து பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தாள்.
தாரமங்கலம்:

தாரமங்கலத்தில், பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி பஸ்சில் இருந்து இறங்கியபோது, தவறி விழுந்து பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தாள். இது தொடர்பாக பஸ்சின் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி கத்திமாரல் வளவு பகுதியை சேர்ந்தவர் தர்மன், விவசாயி. இவருடைய மகள் மேகலா (வயது 16). இவள் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாள்.

நேற்று காலை மேகலா வழக்கம்போல் அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்றாள். தாரமங்கலம் அண்ணா சிலை அருகே பஸ் மெதுவாக சென்றபோது முன் படிக்கட்டு வழியாக மாணவி பஸ்சில் இருந்து இறங்க முயன்றாள்.

அப்போது அவளது உடை பஸ்சில் சிக்கிக்கொண்டதில் நிலைதடுமாறிய மேகலா சாலையில் விழுந்தாள். அப்போது பஸ்சின் பின்சக்கரம் அவள் மீது ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்த மேகலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனிற்றி மாணவி மேகலா பரிதாபமாக இறந்தாள்.

இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவர் தர்மபுரி ஈச்சம்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். 
Tags:    

Similar News