செய்திகள்

சத்துணவுத் திட்ட ஒப்பந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

Published On 2018-07-05 04:06 GMT   |   Update On 2018-07-05 04:06 GMT
சத்துணவு திட்டத்திற்கான பொருட்கள் சப்ளை செய்யும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். #IncomeTaxRaids #NutritiousMealCompanies
சென்னை:

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கான சத்துமாவு, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் டெண்டர் எடுத்துள்ளன. சத்துணவுத் திட்ட பொருட்களை சப்ளை செய்யும் 2 தனியார் நிறுவனங்கள், அனைத்து பகுதிகளிலும் கிளைகளை அமைத்து அந்தந்த பகுதிகளில் விநியோகம் செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே சமயத்தில் சோதனையைத் தொடங்கினர். சென்னை, கோவை, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் தனித்தனி குழுக்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுதவிர கர்நாடக மாநிலத்தில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடக்கிறது. மொத்தம் 70 இடங்களில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிறுவனங்கள் வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #IncomeTaxRaids #NutritiousMealCompanies

Tags:    

Similar News