செய்திகள்

சோழவந்தான் அருகே மணல் திருடிய 11 லாரிகள் பறிமுதல்

Published On 2018-06-21 09:11 GMT   |   Update On 2018-06-21 09:11 GMT
சோழவந்தான் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 லாரிகள், ஒரு ஜே.சி.பி. வாகனம், 4 மோட்டார் சைக்கிள், 1 டாடா சுமோ வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சோழவந்தான்:

சோழவந்தான் அருகே சித்தாதிபுரம் வைகை ஆற்றில் இரவில் அதிக அளவில் மணல் திருட்டு நடைபெறுவதாக புகார் எழுந்தது அந்த பகுதியில் இரவு நேரங்களில் திருட்டு தனமாக சுமார் 200 லாரிகள் வீதம் தினமும் மண் அள்ளப்படுகிறது. இந்த மணல் கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு அதிக அளவில் கடத்தப்படுகிறது

இதுபற்றி கலெக்டரிடம் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

மேலும் இங்கு ஆற்றின் நடுவே பல அடி நீளம் ஆற்று மணல் தோண்டி எடுத்து நீராதாரத்தையே அழித்துள்ளனர்

இதை தடுக்க சென்ற காடு பட்டி உதவி ஆய்வாளர் தனபாலை இந்த மணல் கடத்தும் கும்பல் 3 முறை லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்துள்ளது.

எனவே சமயநல்லூர் உதவி கண்காணிப்பாளர் மோகன்குமார் ஆலோசனையின் பேரில் காடு பட்டி உதவி ஆய்வாளர் தனபால், மற்றும் இருளப்பன் தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தலில் ஈடுபட்ட 11 லாரிகள், ஒரு ஜே.சி.பி. வாகனம், 4 மோட்டார் சைக்கிள், 1 டாடா சுமோ வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

போலீசாரை கண்டதும் மணல் திருடும் கும்பல் வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது.

மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த டிரைவர் ஜோதிபாசு என்பவர் வாடிப்பட்டி போலீசாரின் வாகன சோதனையில் சிக்கி தப்பிக்க நினைத்து ஓடி அருகிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News