செய்திகள்

மழை பெய்தும் பலன் இல்லை - 5 அடியாக குறைந்த ஆத்தூர் காமராஜர் அணை

Published On 2018-06-20 10:19 GMT   |   Update On 2018-06-20 10:19 GMT
ஓரளவு மழை பெய்த போதிலும் ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர் வரத்து இல்லாததால் தற்போது 5 அடி மட்டுமே உள்ளது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மழை பகுதியான ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி, தடியன் குடிசை, மங்கலம் கொம்பு, சோலைக்காடு ஆகிய பகுதியில் இருந்து பெருகி வரும் மழை நீர் ஆத்தூர் காமராஜர் அணையை அடைகிறது. கொடைக்கானல் மலை கிராமங்களில் கோடை மழையைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழையும் பெய்து வந்த நிலையில் இந்த பகுதியில் போதிய நீர் வரத்து இல்லை.

இதனால் ஆத்தூர் காமராஜர் அணையில் தற்போது 5 அடி மட்டுமே நீர் உள்ளது. 23 அடி உயரமுள்ள இந்த அணை திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகளுக்கும், 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கும் நீர் ஆதாரமாக உள்ளது.

ஆனால் தற்போது நீர் மட்டம் குறைந்துள்ளதால் அடுத்து வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Tags:    

Similar News