செய்திகள்

திண்டுக்கல் அருகே கேரள வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-06-11 10:06 GMT   |   Update On 2018-06-11 10:06 GMT
திண்டுக்கல் அருகே கேரள வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்:

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சிவராமன் மகன் கிரிஷ் (வயது 23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கமாலுதீன் என்பவர் மூலம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் அருகே உள்ள வி.குரும்பபட்டிக்கு மாங்காய் பறிக்கும் பணிக்காக தொழிலாளர்களுடன் வந்திருந்தார்.

காண்டிராக்ட் வேலை முடிந்து விட்டதால் அவர்கள் அனைவரும் சென்று விட்டனர். கிரிஷ் மட்டும் நேற்று மீண்டும் வி.குரும்பபட்டிக்கு வந்தார். பணிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் எதற்காக வந்தாய்? என தோட்டத்தின் உரிமையாளர் பிச்சை கூறியுள்ளார்.

இன்று காலை வத்தல தொப்பம்பட்டியில் உள்ள மாந்தோப்பில் கழுத்தில் கயிறு மாட்டிய நிலையில் கிரிஷ் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் வசந்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அவரது புகாரின் பேரில் சாணார்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து கிரிஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளனர்.

Tags:    

Similar News