செய்திகள்
ஓடும் பஸ்சில் டிரைவர் மாரடைப்பால் மரணம்- 50 பயணிகள் உயிர் தப்பினர்
ஊத்துக்கோட்டை அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் இருக்கையிலேயே சரிந்து விழுந்து இறந்தார். பஸ்சை பாதுகாப்பாக நிறுத்தி 50 பயணிகளை காப்பாற்றினார்.
ஊத்துக்கோட்டை:
பள்ளிப்பட்டு அருகே உள்ள கரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 45). ஆந்திர மாநிலம் போக்குவரத்து துறையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி நோக்கி பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே பூச்சாட்டூரில் வந்த போது திடீரென அருணாச்சலத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஸ்சை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார்.
சிறிது நேரத்தில் அருணாச்சலம் டிரைவர் இருக்கையிலேயே சரிந்து விழுந்து இறந்தார். அவர் மாரடைப்பால் இறந்து இருப்பது தெரிந்தது.
மரணம் ஏற்படும் நேரத்திலும் அவர் பாதுகாப்பாக பஸ்சை நிறுத்தியதால் அதில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அருணாச்சலத்துக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலி அதிகமானதால் செங்குன்றம் பஸ் நிறுத்தத்தில் உள்ள மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு இருக்கிறார்.
இதேபோல் பிச்சாட்டூர் அருகே வந்தபோது மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கு கடையில் மாத்திரை வாங்கி இருக்கிறார். இதன் பின்னர் அருணாச்சலம் தொடர்ந்து பஸ்சை ஓட்டியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பிச்சாட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews