செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.83 லட்சம் மோசடி

Published On 2018-06-04 11:42 GMT   |   Update On 2018-06-04 11:42 GMT
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.83 லட்சம் மோசடி செய்த நபர்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வீரப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மனைவி ஜெயலட்சுமி. மதுரையைச் சேர்ந்த சுசீலா, மணிகண்டன் மற்றும் சேசுராஜ் உள்பட 10 பேர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களிடம் அரசு அலுவலகத்தில் வேலை காலியாக இருப்பதாக வேலவன், மூர்த்தி, முருகேசன் ஆகியோர் கூறினர். மேலும் உலுப்பகுடியைச் சேர்ந்த பாரதி அவரது மனைவி சாந்தா தேவி, மகன் தியாகு ஆகியோர் முன்னாள் அமைச்சருக்கு நெருங்கிய உறவினர்கள் மூலமாக கால்நடை உதவியாளர், ஆய்வக உதவியாளர் மின்வாரிய துறையில் இடை நிலை உதவியாளர், ஆசிரியர் பணி ஆகியவை கிடைக்க ஏற்பாடு செய்ய முடியும் என்றனர்.

இதற்காக ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட தொகையை கடந்த 2015-ம் ஆண்டு பெற்றனர். மொத்தம் ரூ.83 லட்சம் அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்பு வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இது குறித்து அவர்களிடம் கேட்ட போது முறையான பதில் இல்லை.

எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News