செய்திகள்

தமிழகம் முழுவதும் 84 தாசில்தார்கள் இடமாற்றம் - அரசு உத்தரவு

Published On 2018-05-31 22:13 GMT   |   Update On 2018-05-31 22:13 GMT
தமிழகம் முழுவதும் 84 தாசில்தார்களை அரசு பணி இட மாற்றம் செய்துள்ளது.
சென்னை:

தமிழகம் முழுவதும் 84 தாசில்தார்களை இடம் மாற்றம் செய்து அரசு வருவாய் நிர்வாக கமிஷனர் கே.சத்யகோபால் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி சென்னை மாவட்ட தாசில்தார்கள் டி.எஸ்.சுப்ரமணியன் திருவள்ளூர் கலெக்டர் கூடுதல் தனி உதவியாளராகவும், வி.அல்லி வேலூர் மாவட்டம் அரக்கோணம் சிப்காட் சிறப்பு துணை கலெக்டராகவும், காஜா சாகுல் அமீது திருவாரூர் மாவட்ட கலால் உதவி கமிஷனராகவும், எம்.இளவரசன் காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் எஸ்.என்.ஜே. ஆலையின் மேற்பார்வையாளராகவும்,

ராதா ஜெயலட்சுமி புதுக்கோட்டை மாவட்ட சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியாகவும், புனிதா திருச்சி கலெக்டர் கூடுதல் தனி உதவியாளராகவும், அறிவுடை நம்பி நெல்லை மாவட்ட சிறப்பு துணை கலெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்ட தாசில்தார்கள் வி.ஈஸ்வரி திருச்சி டிஸ்டில்லரி ரசாயன தொழிற்சாலை அதிகாரியாகவும், செல்வராஜா நாகப்பட்டினம் மாவட்ட சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியாகவும், விமல்குமார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செம்மேடு ராஜாஸ்ரீ சர்க்கரை ஆலை அதிகாரியாகவும், எம்.ரமேஷ் சென்னை சோழிங்கநல்லூர் மண்டல உணவு வழங்கல்துறை உதவி கமிஷனராகவும்,

எஸ்.தனலட்சுமி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தரணி சர்க்கரை ஆலை அதிகாரியாகவும், சோபியா ஜோதிபாய் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநில சந்தை விற்பனை பிரிவு மேலாளராகவும், கே.சந்திரசேகரன் கிருஷ்ணகிரி மாவட்ட சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியாகவும், ஜெயகுமார் நீலகிரி மாவட்ட கலால் உதவி கமிஷனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட தாசில்தார்கள் கஜேந்திரன் கடலூர் மாவட்ட ஆய்வு(செல்) அதிகாரியாகவும், என்.உஷா சென்னை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உதவி கமிஷனராகவும், பார்த்தீபன் காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் எஸ்.என்.ஜே.ஆலையின் மேற்பார்வையாளராகவும்,

அசோகன் காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் மின் திட்ட துணை கலெக்டராகவும், ரமேஷ் திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரியாகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட தாசில்தார் செல்வகுமார் விருதுநகர் மாவட்ட கலால் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News