செய்திகள்

தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் வகுப்பு நடத்த கூடாது - முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை

Published On 2018-05-02 18:01 GMT   |   Update On 2018-05-02 18:01 GMT
தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையில் கண்டிப்பாக பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தகூடாது என தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி ஒட்டப்பட்டியில் உள்ள சைல்டு லைன் இயக்குனருக்கு வந்த புகார்களில், தனியார் பள்ளியில் கோடை கால வகுப்பு நடத்துகின்றனர். வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கு எங்களால் வரமுடியவில்லை என்றும், வகுப்புகள் காலை 7 மணி முதல் நடப்பதால் சில குழந்தைகள் மயக்கம் போட்டு விழுகின்றனர் என்றும் மாணவ, மாணவிகளிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன.

எனவே கோடை விடுமுறையில் கண்டிப்பாக பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தகூடாது. இப்புகார் பெறப்பட்ட பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News