செய்திகள்

வத்தலக்குண்டு பகுதியில் வசிய மை தடவி நகை-பணம் பறிப்பு

Published On 2018-04-25 12:17 GMT   |   Update On 2018-04-25 12:17 GMT
வத்தலக்குண்டு பகுதியில் வசிய மை தடவி நகை-பணம் கொள்ளையடிக்கும் கும்பல் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

வத்தலக்குண்டு:

கொடைக்கானல், மூணாறு, சபரிமலை, குமுளி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக வத்தலக்குண்டு உள்ளது. ஆனால் இந்த பஸ்நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. தற்போது குடிமகன்கள் மற்றும் பிக்பாக்கெட் திருடர்களால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் வசிய மை தடவி கொள்ளையடிக்கும் கும்பலும் அதிகரித்து வருகின்றன.

பண்ணைக்காடு அருகே காணல்காட்டை சேர்ந்தவர் கவுசல்யா. ஊருக்கு செல்வதற்காக கைக்குழந்தையுடன் வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் காத்திருந்தார். பஸ்சில் தனது கைப்பையை வைத்துவிட்டு வாட்டர்பாட்டில் வாங்க சென்றார்.

அப்போது அருகே அமர்ந்திருந்த ஒரு பெண் கவுசல்யாவின் கையில் மைபோன்ற பொருளை தடவினார். இதனால் கவுசல்யா நிதானம் இழந்த நிலையில் இருக்கும்போது ஒருசில நிமிடங்களில் கைப்பையை திருடிச் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சகஜநிலைக்கு திரும்பிய கவுசல்யா தன்னுடைய பணம் மற்றும் செல்போன் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க விரும்பாமல் அக்கம்பக்கத்தினரிடம் அக்கம்பக்கத்தினரிடம் பஸ் டிக்கட் எடுக்க பணம் வாங்கிக்கொண்டு கண்ணீருடன் ஊர் திரும்பினார்.

இதேபோல் காளியம்மன் கோவில் அருகே அருணாசலபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஆட்டோவில் ஏறி உள்ளார். இதனை நோட்டமிட்ட 4 பெண்கள் அவருடன் ஆட்டோவில் ஏறி உள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆசிரியைக்கு வசியமை தடவி கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை திருடிச்சென்றனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் லேத் வைத்திருக்கும் நல்லுபிள்ளை என்பவர் மீது மை தடவி திருச்சிக்கு அழைத்து சென்று அவரிடமிருந்து ரூ.2500 பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுபோன்று வசியமை வைத்து தொடர் கொள்ளை நடந்து வருவதால் வத்தலக்குண்டு நகர மக்கள் பீதியில் உள்ளனர்.

பெரும்பாலானோர் புகார் அளிக்க முன்வராததால் கொள்ளை கும்பல் துணிவுடன் அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர்.

Tags:    

Similar News