செய்திகள்

நிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்

Published On 2018-04-25 07:04 GMT   |   Update On 2018-04-25 07:04 GMT
அறிவியலாளர்களால் நிழல் இல்லா நாள் என கூறப்படும் அதிசய நாளில் சென்னை மக்கள் தங்கள் நிழலை கண்டு ரசித்தனர். #zeroshadowday #chennai
சென்னை:

அறிவியலாளர்களால் பூஜ்ஜிய நிழல் அல்லது நிழல் இல்லா நாள் என கூறப்படும் அதிசய நாள் நேற்று சென்னையில் நிகழ்ந்தது. பூஜ்ஜிய நிழல் நாளில் நிழலானது வழக்கமாக விழும் நிழலை விட வித்தியாசமானதாக இருக்கும். அதாவது மற்ற நேரங்களில் சிறிது பக்கவாட்டில் விழும் நிழல் சரியாக நேராக விழும்.



இதற்கு சூரியனின் கதிர்கள் பூமியின் பூமத்தியரேகையின் மீது சரியாக விழுவது தான் காரணம். சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் நிழலானது பொருளை விட்டு விலகிச் செல்லாமல் நேராக விழிகிறது. வழக்கமாக சூரியன் வடகிழக்கு அல்லது தென்கிழக்கில் உதிக்கும். ஆனால் இந்நாளில் சூரியன் சரியாக கிழக்கில் உதித்து மேற்கில் மறையும்.


 
இந்த இயற்கை அதிசயம் ஆண்டிற்கு இரண்டு முறை மட்டுமே நடைபெறும். இந்நாள் ஆண்டுதோறும் சென்னையில் ஏப்ரல் 24 மற்றும் ஆகஸ்ட் 18-ம் தேதி நிகழும். நேற்று சென்னையில் நிகழ்ந்த அதிசயத்தை அதனை அனைவரும் கண்டு ரசித்தனர். #zeroshadowday #chennai

Tags:    

Similar News