செய்திகள்

60 சமையலர்கள் நியமனத்தில் முறைகேடு- தலைமை ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை

Published On 2018-04-21 11:03 GMT   |   Update On 2018-04-21 11:03 GMT
சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகளில் போலி பணி நியமனங்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட சமையலர்களை முறைகேடாக பணியமர்த்தியதது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடியில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் வெங்கடேசன் (37). சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகளில் போலி பணி நியமனங்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட சமையலர்களை முறைகேடாக பணியமர்த்தியதற்கு வெங்கடேசன் உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது.

மேலும் உயர் அதிகாரிகள் பெயரை சொல்லி விடுதி வார்டன்கள், தலைமை ஆசிரியர்களிடம் வசூலில் ஈடுபட்டதுடன், பள்ளிக்கும் சரியாக செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வந்த புகாரின் பேரில் வெங்கடேசன், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிக்கு நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே வெங்கடேசனிடம் சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை உயர் அதிகாரிகள் இன்று விசாரணை நடத்துகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் அவர் விரைவில் சஸ்பெண்டு செய்வார் என்று கூறப்படுகிறது. #tamilnews
Tags:    

Similar News