செய்திகள்
ராமலிங்கம் ஆஜராக வந்த போது எடுத்தபடம்.

ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில் ஜெயலலிதா தனி செயலாளர் ராமலிங்கம் ஆஜர்

Published On 2018-04-17 08:06 GMT   |   Update On 2018-04-17 08:06 GMT
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா தனி செயலாளர் ராமலிங்கம் ஆஜரானார்.
சென்னை:

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் நேரில் சென்று விளக்கம் அளித்து வருகிறார்கள்.

இதுதவிர ஜெயலலிதாவின் உதவியாளர்கள், கார் டிரைவர்கள், செயலாளர்கள், அரசு டாக்டர்கள், சசிகலாவின் உறவினர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சசிகலாவும் நடந்த சம்பவங்கள் பற்றி பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார்.

நேற்று சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.


ஜெயலலிதாவிடம் செயலாளராக இருந்த ராமலிங்கம் ஐ.ஏ.எஸ். இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவை யார் சந்திக்க முயன்றாலும் அதிகாரி ராமலிங்கம்தான் அனுமதி பெற்று தரும் இடத்தில் இருந்தார்.

எனவே அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை பார்க்க யார் வந்தாலும் இவருக்கு தெரியும் என்பதால் அது தொடர்பாக இன்று விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது.

அடுத்தக்கட்டமாக இவரிடமும் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.
Tags:    

Similar News