செய்திகள்

திருவள்ளூரில் குற்ற வழக்கில் சிக்கிய வாகனங்கள் நாளை ஏலம்

Published On 2018-04-16 07:15 GMT   |   Update On 2018-04-16 07:15 GMT
திருவள்ளூரில் குற்ற வழக்கில் சிக்கிய வாகனங்கள் நாளை ஏலம் விடப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் நாளை காலை 10 மணி அளவில் துளசி திரையரங்கம் அருகே உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது.

வாகனங்களை ஏலம் கேட்போர் முன்வைப்பு கட்டணத் தொகையாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தோர், ஏலம் கேட்ட தொகையுடன் இருசக்கர வாகனத்திற்கு 12 சதவீதம், 4 சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் விற்பனை வரியை உடனடியாக செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தும் போது முன்வைப்பு கட்டணத் தொகை அதில் சரி செய்யப்படும். ஏலத்தில் பங்கேற்று, வாகனம் எடுக்காதவர்களுக்கு முன்வைப்பு கட்டணத் தொகை ஏலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News