செய்திகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை எதிர்ப்பு - தமிழக காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

Published On 2018-04-13 17:35 GMT   |   Update On 2018-04-13 17:35 GMT
கத்வா மற்றும் உன்னாவ் பகுதிகளில் சிறுமிகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறையை கண்டிக்கும் வகையில் தமிழக காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். #Congress
சென்னை:

ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதேபோல உத்தரப்பிரதேசம் உனா நகரில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த தந்தை போலீஸ் கஸ்டடியில் மரணமடைந்தார்.

இத்தகைய சம்பவங்களை கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நள்ளிரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவனில் இருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு வரை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. இதில் ஜே.எம்.ஆரூண் உள்பட காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய திருநாவுக்க்கரசர், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி மௌனம் கலைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #Congress #Tamilnews
Tags:    

Similar News