செய்திகள்

ஆரணியில் கோட்டாட்சியர் அலுவலகம் கட்ட இடம் தேர்வு- சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு

Published On 2018-04-11 16:07 GMT   |   Update On 2018-04-11 16:07 GMT
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் தற்காலிகமாக கோட்டாட்சியர் அலுவலகம் இயங்க உள்ளது. இந்த கட்டிடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக ஆரணி வருவாய் கோட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் இதுவரை திருவண்ணாமலை, செய்யாறு என 2 வருவாய் கோட்டங்களாக செயல்பட்டு வந்தது. இதில் திருவண்ணாமலை கோட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, செங்கம், போளூர், தண்டராம்பட்டு, கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர் என 6 தாலுகாக்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.

மேலும் செய்யாறு கோட்டத்தின் கீழ் செய்யாறு, வந்தவாசி, ஆரணி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு என 5 தாலுகாக்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்த நிலையில் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிதாக ஆரணி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய கோட்டங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆரணி, போளூர், கலசப்பாக்கம் ஆகிய தாலுகாக்களும், புதிதாக அமைய உள்ள ஜமுனாமரத்தூர் தாலுகாவையும் சேர்த்து புதிதாக ஆரணி கோட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கோட்டத்திற்கு வருவாய் கோட்ட அலுவலர் உள்பட 12 பணியிடங்கள் புதியதாக உருவாக்கப்படுகிறது. ஆரணி கோட்டம் கடந்த 6-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

புதியதாக கோட்டாட்சியர் அலுவலகம் கட்ட முடிவு செய்யபட்டுள்ளது. இதற்காக ஆரணி பழைய தாலுகா அலுவலகத்தில் உள்ள இடம் தேர்வு செய்யபட்டுள்ளது. இந்த இடத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் தற்காலிகமாக கோட்டாட்சியர் அலுவலகம் இயங்க உள்ளது. இந்த கட்டிடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.

கலெக்டர் கந்தசாமி, தூசிமோகன் எம்.எல்.ஏ. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) நெடுமாறன், வக்கீல் சங்கர், நகர பேரவை பாரிபாபு, நகர செயலாளர் அசோக், ஒன்றிய செயலாளர் சேகர், கஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News