என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sevur ramachandran"

    • சேவூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரன் இல்லம் மற்றும் அவரது மகன் இல்லத்திலும் சோதனை.
    • 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேவூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரன் இல்லம் மற்றும் அவரது மகன் இல்லத்தில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் நீக்கப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர். #ADMK #EdappadiPalanisamy
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் க.பொன்னுசாமியும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.பி.யும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.



    அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக ஆர்.லட்சுமணன் எம்.பி.யும், கொள்கை பரப்பு துணை செயலாளராக க.பொன்னுசாமியும், ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக ஆர்.வி.என்.கண்ணனும், துணை செயலாளராக கே.சேதுராமானுஜமும், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளராக பி.கருணாகரனும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சி.வி.சண்முகமும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

    தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #EdappadiPalanisamy
    ×