செய்திகள்

வீட்டின் பின்புறம் குழி தோண்டியதில் சாமி சிலை கிடைத்ததால் பரபரப்பு

Published On 2018-04-06 16:20 GMT   |   Update On 2018-04-06 16:20 GMT
செய்வினை சந்தேகத்தால் வீட்டின் பின்புறம் குழி தோண்டியதில் சாமி சிலை கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பூதனூரைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவருடைய குடும்பத்தினருக்கு யாரோ செய்வினை வைத்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகித்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து சீனிவாசன் என்ற சாமியாரை வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து வீட்டில் பூஜைகள் நடந்தன. பூஜையின் போது வீட்டின் பின்புறம் குழி தோண்டப்பட்டதாகவும், அப்போது அங்கு நடராஜர் சிலை, காமாட்சி விளக்கு, பித்தளை பொருட்கள் கிடைத்ததாகவும் தகவல் பரவியது.

இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் ராஜம்மாள் வீட்டின் பின்புறம் தோண்டப்பட்ட குழியில் நடராஜர் சிலை, காமாட்சி விளக்கு, பித்தளை பொருட்கள் கிடைத்தது தெரியவந்தது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News