செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் - சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தல்

Published On 2018-03-28 10:13 GMT   |   Update On 2018-03-28 10:13 GMT
மக்களின் எதிர்ப்பை மீறி செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தி உள்ளது.
சென்னை:

சமத்துவ மக்கள் கழக நிறுவனர் தலைவர் ஏ.நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில், தூத்துக்குடி மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளில் அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் போராட்டத்தையும் மீறி நடக்கும் இந்த செயல் அந்த பகுதி மக்களின் வாழ்கையை பற்றி சிறிதும் சிந்திக்காத நிலையையே காட்டுகிறது.

எனவே அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்ப்பை மீறி செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். தற்போது தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்று சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News